நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஆக., 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ளதால், இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், தேவாலா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் பேய் மழை பெய்து வருகிறது.

இன்று காலை முதலே உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இதைத் தொடர்ந்து, மதியம் முதல் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கனமழையின் காரணமாக நகரில் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக நாளை (ஆக., 16) நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
இதனிடையே, மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 252 மி.மீ., மழையும், அப்பர் பவானியில் 188 மி.மீ., மழையும், நடுவட்டத்தில் 107 மி.மீ., மழையும், தேவாலாவில் 128 மி.மீ., மழையும், கூடலூரில் 84 மி.மீ., மழையும், கிளன்மார்கனில் 132 மி.மீ., மழையும், உதகையில் 62.40 மி.மீ., மழையும், குன்னூரில் 23 மி.மீ., மழையும், குந்தா பாலத்தில் 36 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. மொத்தம் 1,193.60 மீ.மி., மழையும் சராசரியாக 70.21 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.