கோவை: பவானியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், போதிய உதவிகள் கிடைக்காததால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பழங்குடியின மக்கள் ஓட்டைப் பரிசல்களில் உயிருக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக - கேரள எல்லையோரத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது பில்லூர் அணை. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு அணை நிரம்பியது.
இதனால், அணைக்கு விநாடிக்கு வரும் 34,000 கனஅடி தண்ணீர் அப்படியே பவானியாற்றிற்கு திறந்துவிடப்படுகிறது. ஏற்கனவே, தொடர் மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள பவானியாற்றில், பில்லூர் அணையின் உபரிநீரும் சேர்த்து திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை போன்ற பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 9,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய விளைநிலங்கள், வாழைத்தோட்டங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் என அனைத்தும் நீரில் மூழ்கின. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலைகள், தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, காந்தவயல் பகுதியில் 20 அடி உயரம் கொண்ட உயர்மட்ட பாலமும், பழங்குடியினர் கிராமங்களும் வெள்ளத்தில் சூழ்ந்திருப்பதால், ஒரு குட்டித் தீவு போல் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் உள்ள சாலைகளும் நீருக்கடியில் சென்று விட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் ஆற்றைக்கடந்து நகரப் பகுதிக்கு செல்லப் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள மூங்கில் மற்றும் தார்ப்பாயினால் செய்யப்பட்ட பரிசல்களை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு, இருசக்கர வாகனங்கள் மற்றும் விவசாய விளைபொருட்களும் வேறு வழியின்றி ஏற்றிச் செல்வதால், பரிசல்களில் ஓட்டை விழுந்து, நீர் உள்ளே கசியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொரு முறை ஆற்றைக் கடக்கும் போதும் பரிசலின் உள்ளே தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் கசியும் பரிசல்களில் பாய்ந்தோடும் ஆற்றில் பயணித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். பள்ளி செல்லும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தினசரி காலை, மாலை என இருமுறை இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருவது காண்போரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இவர்கள் பயணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக ஃபைப்பரினாலான பரிசல்களையோ அல்லது பிளாஸ்டிக் படகு போன்றவற்றையோ வழங்குவது அவசியம் என்ற கோரிக்கைகளையும் அவர்கள் வைத்துள்ளனர். மலைக்கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், இந்த நீரைப் பருகவும், குளிக்கவும் காட்டு யானைகள் வருவதால் வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சமாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் கிராமமக்கள்.

பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து, வாழ்வாதாரமான விவசாயம், குடியிருப்புகள் என அனைத்தையும் இழந்து தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க அரசு முன்வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.