கோவை: சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் குருக்கள் பட்டியைச் சேர்ந்தவர் மாரிராஜா. இவர், கோவை இதய தெய்வம் மாளிகை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பணி நடைபெறும் இடத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்ற முடியாது எனவும், சென்னையில் உள்ள கோட்டையில் குண்டு வெடிக்கும் என மாரி ராஜா சென்னை காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில், இவர் கோவையில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் இன்று பணியில் இருந்த மாரிராஜாவை, குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்ததற்காகக் கைது செய்தனர்.
இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294பி, 506, 507 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இவர் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்..? இவருக்கு வேறு ஏதாவது கும்பலுடன் தொடர்பு உள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலையில், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு விடுத்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.