சுதந்திர இந்தியாவுக்கான முதல் தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா...? எங்கு..எப்போது.. உருவாக்கப்பட்டது என்பதை அறிந்துள்ளீர்களா..?

நீலகிரி: நாட்டின் 72-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, நமது சுதந்திர இந்தியாவுக்கான முதல் தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..


நீலகிரி: நாட்டின் 72-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, நமது சுதந்திர இந்தியாவுக்கான முதல் தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

பல்வேறு தலைவர்களால் பல்வேறு வடிவங்களில் பல்வேறு எண்ணங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியானது பல பரிணாமங்களைக் கடந்து, இன்றுள்ள வடிவத்தைப் பெற்றது. சுதந்திர இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட கொடிகளில் ஒரு வடிவம் உதகையிலும் உதயமானது. அதை வடிவ மைத்தவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னி பெசன்ட் அம்மையார்.



லண்டனில் பிறந்து சென்னை அடையாறில் தனது இறுதி நாட்களை நிறைவு செய்தவர் அன்னி பெசன்ட். அந்நியராய் இருந்தாலும், காங்கிரஸ் தலைவர்களோடு சேர்ந்து இந்திய சுதந்திர போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட போராளி. இதற்காகவே, 1917 ஜூன் 15-ல் கைது செய்யப்பட்ட அன்னி பெசன்ட், உதகையில் உள்ள பிர்லா ஹவுஸில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்ததன் நூற்றாண்டு இது.

உதகையில் வீட்டுச் சிறையில் இருந்தபோதே இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த அன்னி பெசன்ட், பிர்லா ஹவுஸ் வளாகத்தில் துணிச்சலுடன் அந்தக் கொடியை ஏற்றினார். அன்றைக்கு அவர் கொடியேற்றிய இடத்தை இன்றைக்கும், பிர்லா ஹவுஸ் நிர்வாகத்தினர் வரலாற்று நினைவிடமாகப் போற்றி மதித்து வருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நீலகிரி ஆவணக் காப்பக இயக்குநர் டி.வேணுகோபால், “பிறப்பிலேயே புரட்சியாளரான அன்னி பெசன்ட், ஆங்கில அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொந்தளித்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக ‘காமன் வீல்’ என்ற வாரப் பத்திரிகையை 1913-ல் தொடங்கினார். அடுத்த ஆண்டே ‘நியூ இந்தியா’ என்ற நாளேடு ஒன்றையும் சென்னையில் தொடங்கி, அதில் சுதந்திரப் போராட்டக் கருத்துக்களை எழுதினார். 

சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொள்வதற்காகவும் கூட்டங்களில் பேசுவதற்காகவும் நாடு முழுவதும் அன்னி பெசன்ட் பயணம் செய்தார். ஒருகட்டத்தில், இவரை முடக்க நினைத்த ஆங்கிலேய அரசு, கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தது. 

சென்னையில் கைது செய்யப்பட்ட அன்னி பெசன்ட், ஊட்டி பிர்லா மாளிகையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறை வைக்கப்பட்டார். அங்கு இருந்தபோதுதான் சுதந்திர இந்தியாவுக்கான புதிய கொடியை, தானே வடிவமைத்து அதை அங்கேயே ஏற்றவும் செய்தார் அன்னி பெசன்ட். இந்த நிகழ்வை போற்றும் வகையில், அவர் கொடியேற்றிய இடத்தில் கல்வெட்டு வைத்து பாதுகாத்து வருகிறார்கள் பிர்லா ஹவுஸ் உரிமையாளர்கள்.” என்றார்.



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீட்டை இதன் உரிமையாளர்கள் பொக்கிஷமாய் பாதுகாப்பதாக பிர்லா ஹவுஸின் மேலாளர் பாபுலால் கூறுகிறார். ’’பிரெட் முரே பார்லேட் என்பவருக்கு சொந்தமான இந்த வீடு ஸ்டாக்பிரிட்ஜ் என பெயர் மாற்றப்பட்டு, 1947-ல் சர் ஹெரால்டு நஜென்ட் கோலம் என்பவருக்கு விற்கப்பட்டது. 1964-ல் இந்த வீடு ஏலத்துக்கு வந்தபோது குவாலியர் குழுமத்தினர் 40 ஆயிரம் ரூபாயிக்கு ஏலம் எடுத்தனர். அதன்பிறகு தான் ‘பிர்லா ஹவுஸ்’ என மாறியது.



அதிலிருந்து இந்த வீட்டை வரலாற்று நினைவிடமாகப் போற்றி வரும் பிர்லா குடும்பத்தினர், இங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில், ஆண்டு தோறும் வீட்டு வளாகத்தில் விழா எடுத்து, இளம் தலைமுறையினர் மத்தியில் தேசபக்தியை பரப்பி வருகிறார்கள். அதற்காகவே இந்த வீட்டை பழமை மாறாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.” என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...