கோவை: மரபின் மைந்தன் முத்தையா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.,19) கோவையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கே.பி.ஆர்., குழுமங்களின் தலைவர் கே.பி., ராமசாமி, மலேசியாவின் மேனாள் மத்திய அமைச்சரும், தாபா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு. சரவணன், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் தலைவர் எம். கிருஷ்ணன், பி.எம்.சி., டெக் கல்லூரி செயலாளர் பி.குமார், காந்திபுரம் ஸ்ரீ முருகவிலாஸ் பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் அ.மாரியப்பன், எழுத்தாளர் கனகதூரிகா, எழுத்தாளர் சிவகுமார் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நூல் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, சொல்வேந்தர் சுகி.சிவம் ‘கவிதை முதல் கடவுள்வரை’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார். கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் ஞாயிறு (19-08-2018) மாலை 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் நமது நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்குகின்றன.