கோவையில் ரூ. 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கோவையில் ரூ. 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படும் என சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவையில் ரூ. 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படும் என சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து, கொட்டும் மழையிலும் வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்து சுதந்திர தின உரையாற்றினார். 

தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு துறையின் சாதனைகளை பட்டியலிட்டு அவர் பேசியதாவது:- இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழகத்தில்தான் தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான். நாட்டுக்காகப் போராடிய வரலாற்று நாயகர்களை நாம் போற்றி புகழ வேண்டும்.

ஜெயலலிதா வழியில், தமிழக அரசு ஏழைகளுக்கு பாடுபட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக, உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. 

பள்ளிக் கல்வித்துறையில் அரசு சாதனை படைத்து வருகிறது. நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 88 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ஜவுளி தொழிலின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கோவையில் ரூ. 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படும், இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா, முதல்வர் நல் ஆளுமை உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...