கருமத்தம்பட்டியில் கைதான பெண் மாவோயிஸ்ட் கேரள சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை

கோவை: கருமத்தம்பட்டி அருகே கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்ட சைனா, கேரளா கண்ணூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கோவை: கருமத்தம்பட்டி அருகே கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்ட சைனா, கேரளா கண்ணூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் ரூபேஸ், அவரது மனைவி சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் 17 வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில், கருமத்தம்பட்டியில் கைது செய்யப்பட்ட போது போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2016-ம் ஆண்டு ஜாமீன் வழங்கியது. தினமும் கியூ பிராஞ்ச் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து இருந்தது. 

இருப்பினும், மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து சிறையில் இருந்தார். இந்நிலையில் ஒவ்வொன்றாக அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்த நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது. இதனையடுத்து, கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவை சிறையில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மாவோயிஸ்ட் சைனா நேற்று (ஆக.,14) மாலை ஜாமீனில் விடுதலையானார். 

கண்ணூர் சிறையில் இருந்து வெளியே வந்த அவரை, மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பியபடி வரவேற்றனர். தினமும் கோவை கியூ பிராஞ்ச் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதைத் தொடர்ந்து, மாவோயிஸ்ட் சைனா வரும் 16-ம் தேதி முதல் கோவை கியூ பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட இருக்கின்றார். மாவோயிஸ்ட் ரூபேஸ் தற்போது கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வீரமணி, அனூப், கண்ணன் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...