கட்டையால் அடித்து சிறுத்தையை விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது

சென்னை: மகளைத் தாக்கி கொல்ல வந்த சிறுத்தையை கட்டையால் அடித்து விரட்டிய கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.


சென்னை: மகளைத் தாக்கி கொல்ல வந்த சிறுத்தையை கட்டையால் அடித்து விரட்டிய கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. 

நாட்டின் 72-வது சுதந்திர தின விழா நாடு நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சார்பில் விருதுகளை வழங்கினார். அதில், மகளைத் தாக்கி கொல்ல வந்த சிறுத்தையை கட்டையால் அடித்து விரட்டிய கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த முத்துமாரிக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை வட்டம், பெரியல்லார் கிராமத்தில் வசிக்கும் ஐ. முத்துமாரி. இவருக்கு சத்தியா (11) என்ற மகள் உள்ளார். கடந்த மே மாதம் 25-ம் தேதி வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சத்தியாவை, அங்கு வந்த சிறுத்தைப்புலி கடித்து இழுத்துச் சென்றது. மகளின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த தாய் முத்துமாரி, கையில் கிடைத்த விறகு கட்டையால் தனி ஆளாக நின்று அடித்தே சிறுத்தையை விரட்டியுள்ளார்.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலுடன் சிறுத்தைப்புலியை விரட்டி தனது மகளை காப்பாற்றிய செயலுக்காக ஐ. முத்துமாரிக்கு 2018-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கி அரசு கவுரவித்துள்ளது. 



இதேபோல, 2018-ம் ஆண்டுக்கான பிற விருதுகள் : 

அப்துல் கலாம் விருது - சென்னை அண்ணா பல்கலை.,யில் உள்ள வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்ஷா குழுவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துறை : தமிழக அரசின் சிறந்த துறைக்கான முதல் பரிசு பதிவுத்துறைக்கும், 2-வது பரிசு உணவுத்துறைக்கும், 3-வது பரிசு சுகாதாரத்துறைக்கும் கிடைத்தது.

சிறந்த மாநகராட்சி : உள்ளாட்சி அமைப்புக்களில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர்

சிறந்த நகராட்சி : கோவில்பட்டி, கம்பம், சீர்காழி

சிறந்த பேரூராட்சி : சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், தேனி - பழனிசெட்டிபட்டி 2வது பரிசும், தர்மபுரி - பாலக்கோடு 3வது பரிசும் பெற்றுள்ளன.

சிறப்பு விருது: காவிரி குழுவுக்கும் அதன் தலைவருக்கும், 

சிறந்த டாக்டர் விருது: திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார்

சிறந்த சமூக பணியாளர்: முனைவர் லதா ராஜேந்திரன்.

மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த தொண்டு நிறுவனம்: திருச்சியை சேர்ந்த அறிவாலயம் குழு

மாற்று திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கியதற்கான விருதுடெட் எக்ஸ்போர்ட்ஸ், மதுரை

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

சிறந்த சமூக பணியாளருக்கான விருது: சிவக்குமார்

மாநில இளைஞர் விருது:ஆண்கள் பிரிவில் தேனியை சேர்ந்த சி.பாஸ்கரன், கடலூரை சேர்ந்த மகேஷ், பெண்கள் பிரிவில் நெல்லையை சேர்ந்த அஸ்விதாவுக்கும் விருது வழங்கப்பட்டன.

 இது தொடர்பான செய்திக்கு: http://simpli-city.in/news-detail.php?nid=27462&isnotify=n

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...