கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தின விழாவையொட்டி, கோவை வ.உ.சி., மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தேசிய கொடியேற்றினார்.
கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தின விழாவையொட்டி, கோவை வ.உ.சி., மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தேசிய கொடியேற்றினார்.

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரின் தலைமையிலும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வது வழக்கம். அந்த வகையில், கோவை மாவட்டத்தில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா, மாநகராட்சி க. விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். காலை 09.20 மணியளவில் மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதோடு, போலீஸ் படை, ஸ்கவுட், தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் ஆடல், பாடல் என கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இறுதியில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.