பயணிகள் நெரிசல் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மின்கசிவு : பேருந்து நிறுத்தத்தை புறக்கணித்து சாலையில் குடியேறியுள்ள பயணிகள்

கோவை: கோவையில் பிரதான பேருந்து நிறுத்தத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளதால், உயிருக்கு பயந்த பயணிகள் பேருந்துக்காக சாலையின் மையப்பகுதி வரை காத்திருக்கின்றனர்.

கோவை: கோவையில் பிரதான பேருந்து நிறுத்தத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளதால், உயிருக்கு பயந்த பயணிகள் பேருந்துக்காக சாலையின் மையப்பகுதி வரை காத்திருக்கின்றனர்.



கோவை - அவினாசி சாலையில் அமைந்துள்ள நவ இந்தியா பகுதியில் 3 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான நிறுவனங்களும் செயல்படுகின்றன. கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நவ இந்தியா பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கோவை மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இது போன்ற பேருந்து நிறுத்தங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் ஒப்பந்தத்தின் பேரில் வைக்கப்படுகிறது.



இந்த நிலையில், நவ இந்தியா பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு அமருவதற்காக வைக்கப்பட்டுள்ள சில்வர் இருக்கைகளிலும் மின்சாரம் பாய்கிறது. இதையறியாமல் அதில் அமரும் பயணிகள் மின்சாரம் தாக்கியவுடனே அதனை உணருகின்றனர். மேலும், குறைந்த அளவிலான மின்சாரம் மட்டுமே பாய்வதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 



ஆனால், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த குறைந்த அளவிலான மின்சாரமே, உயிரைப் பறிக்கும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிருக்கு பயந்த பயணிகள் பேருந்துக்காக சாலையின் மையப்பகுதி வரை காத்திருக்கின்றனர். எனவே, விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அதோடு பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள மின்பெட்டியிலும் மின்கசிவு ஏற்பட்டு, வெடித்துச் சிதறியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...