கோவை: தி.மு.க., வில் அழகிரியால் எழுந்துள்ள பிரச்சனைகள் உள்பட தமிழகத்தின் அனைத்து விவகாரங்களிலும் பா.ஜ.க., பின்னணி என்பது ஒரு வகையில் மகிழ்ச்சியளிப்பதாக மாநில பா.ஜ.க., செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான பா.ஜ.க.,வின் தேர்தல் பிரிவு பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ஜ.க., மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் ரஜினி., கமல் என யார் கட்சி ஆரம்பித்தாலும், அரசாங்கத்தின் செயல்பாடாக இருந்தாலும், துறை சார்ந்த அதிகாரிகளின் செயல்பாடாக இருந்தாலும் அனைத்திற்கும் பா.ஜ.க., பின்னணியில் இருப்பதாகக் கூறும் மனநிலை உருவாகியுள்ளது. அழகிரி அவரது தந்தை உயிரோடு இருந்த காலத்திலேயே கட்சிக்குள் தனது கருத்தை வலியுறுத்தியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதெல்லாம் யாரும் பா.ஜ.க., பற்றி யாரும் கூறவில்லை. தற்போது, அழகிரி ஏதேனும் கருத்தை சொன்னால் பா.ஜ.க., பின்னணியில் உள்ளது என்கிறார்கள்.
மஞ்சள் காமாலை வந்தவர்களுக்குப் பார்த்ததெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என சொல்வதைப்போல தமிழகத்தில் தற்போது பார்ப்பது அனைத்திலும் பா.ஜ.க.,வை போல தெரிகிறது. இது எங்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஏனெனில், பா.ஜ.க.,வை தமிழகத்தில் பெரிய அரசியல் சக்தியாக பிற கட்சிகள் நினைக்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.