பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு : கரையோரப் பகுதிகளில் அ.தி.மு.க., எம்.பி. ஏ.கே., செல்வராஜ் நேரில் ஆய்வு

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளை அதி.மு.க., எம்.பி. ஏ.கே., செல்வராஜ் நேரில் பார்வையிட்டார்.

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளை அதி.மு.க., எம்.பி. ஏ.கே., செல்வராஜ் நேரில் பார்வையிட்டார்.

 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவான 100 அடியை எட்டியுள்ளதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே., செல்வராஜ் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் ஆற்றுப் பகுதிகளில் கரையோரத்தில் பார்வையிட்டார். மேலும், சிறுமுகை அருகே உள்ள கிச்சகத்தியூர் பாலத்தில் தேங்கி உள்ள தண்ணீரையும், வச்சினம்பாளையம் வேடர்களின் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதையும் ஆய்வு செய்தார்.

பின்னர், மேட்டுப்பாளையம் சமண்ணா வாட்டர் ஹவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே தண்ணீர் தேங்கி நிற்பதைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி., ஏ.கே. செல்வராஜ் ஆணை பிறப்பித்தார். 

ஆலாங்கொம்பு பகுதியில் குளிப்பதற்கு ஒரு முதியவர் ஆற்றில் இறங்கிய போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். உடனடியாக தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முதியவர் மீட்கப்பட்டார். பின்னர், அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வேண்டிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்குத் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது, காரமடை ஒன்றிய கழக செயலாளர் பி.டி. கந்தசாமி, ஒன்றிய கழக துணை செயலாளர் ரங்கராஜ் எல்.எஸ்.புரம் ரவி. கே தமிழ் சேட் ஆகியோர் உடன் இருந்தனர்.. இதனிடையே, பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...