கோவை : சரவணம்பட்டி அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 3 மாத பெண் குழந்தையைக் கொன்ற தாய் வனிதா மற்றும் தகாத உறவு காதலன் சீனிவாசன் ஆகியோருக்கு 28-ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை : சரவணம்பட்டி அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 3 மாத பெண் குழந்தையைக் கொன்ற தாய் வனிதா மற்றும் தகாத உறவு காதலன் சீனிவாசன் ஆகியோருக்கு 28-ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரத்தில் உள்ள 3-வது வீதியில் வசித்து வரும் தம்பதிகள் கார்த்திக் மற்றும் வனிதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில், கவிஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை நேற்று கழுத்தறுக்கப்பட்ட நிலையில், வீட்டின் அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தாய் வனிதா தான் குழந்தையை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் போலீசாரிடம் தாய் வனிதா வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- தனது குழந்தை கவிஸ்ரீ தனக்கும் தன்னோடு தகாத உறவுக் காதலன் சீனிவாசனுக்கும் இடைஞ்சலாக இருந்தது. இதனால், இருவரும் சேர்ந்து குழந்தையைக் கொல்ல முடிவு செய்தோம். அதன்படி, சீனிவாசனும், நானும் சேர்ந்து குழந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தோம். பின்னர், குழந்தையைத் துணியில் சுற்றி குப்பைத் தொட்டியின் அருகில் உள்ள முட்புதரில் தூக்கி வீசினோம், இவ்வாறு கூறினார். இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, தகாத உறவுக் காதலன் ஸ்ரீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, குழந்தையின் தாய் வனிதா மற்றும் தகாத உறவு காதலன் சீனிவாசன் ஆகியோர் கோவை ஜே.எம் 2 நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, இருவருக்கும் வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி ஞானசம்பந்தன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.