எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் : மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை : மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை : மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மாநில தலைவர் முகமது முபாரக் தலைமையில் போத்தனூர் பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி. மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விடாமல். அன்னிய சக்திகள் தடுப்பதாக தெரிவித்தற்கு கட்சி சார்பாக கண்டனம் தெரிவித்து கொண்டனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஐ.நா.,வில் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை வேண்டுமென்றே, மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"அண்மையில் பொறுப்பேற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவியேற்பு விழாவின் போது, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான உரிய மரியாதையின்றி புறக்கணிப்பட்டனர். இந்த செயலுக்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். கேரளாவில் பேரிடர் மீட்பு பணியில் எஸ்.டி.பி.ஐ., தொண்டர்கள் ஏராளமானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்," இவ்வாறு மாநில தலைவர் முகமது முபாரக் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...