6 பேரை பலி கொண்ட சுந்தராபுரம் விபத்து வழக்கு : போலீசாரின் மனு தள்ளுபடி

கோவை: சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவை: சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஆக.,1-ம் தேதி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அந்த காரின் ஓட்டுநர் ஜெகதீஸ் குமாரை பிடித்த போலீசார் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் ஓட்டுநர் ஜெகதீஸ் குமார் மதுபோதையில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் வாகனம் ஓட்டி வரும் போது, ஆல்கஹால் ஏதும் பயன்படுத்தவில்லை என ரத்த பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வழக்கில் இரு வெவ்வேறு விதமான அறிக்கையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கார் ஓட்டுநர் ஜெகதஸ் குமார் மீது 279, 337, 338, 304 (2) ஐ.பி.சி., என்ற 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் சார்பில் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, போலீசாரின் மனுவை ஜெ.எம். நீதிபதி பாலமுருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...