நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கிளன் மார்கன் அணியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கிளன் மார்கன் அணியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால், வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனிடையே, நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான கிளன் மார்கன் அணையும் நிரம்பியுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவின் பேரில் அணையின் பாதுகாப்பு பருதி 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மசினகுடி, மாயார், சிங்காரா, தெப்பக்காடு கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.