யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்ததால் சீல் வைக்கப்பட்ட மற்றும் பரிசீலனையில் உள்ள விடுதிகளின் விபரம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் இருந்த 27 விடுதிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் இருந்த 27 விடுதிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். 

நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகியப் பகுதிகள் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்கள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், யானை வழித்தடங்களை வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த 9-ம் தேதி யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்கள் மீது பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர். யானைகள் வழித் தடத்தில் கட்டப்பட்டுள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்களின் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை, அடுத்த 24 மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்வார். அந்த ரிசார்ட்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டிருந்தால், ஆட்சியர் முடிவு எடுக்கலாம். சட்டத்துக்குப் புறம்பாக, முன் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்தால், அடுத்த 48 மணி நேரத்தில் தங்கும் விடுதிகளையும் மூடி சீல் வைக்க வேண்டும், இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அதன்பேரில், மாயார் யானைகள் வழித்தடத்தில் இருந்த விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து, 48 மணி நேர அவகாசம் முடிந்த நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். உதகை கோட்டாச்சியர் டாக்டர் சுரேஷ் தலைமையில் இந்தப் பணிகள் நடைபெற்றது. 

சீல் வைக்கப்பட்ட விடுதிகள் : 

1. பீர் மவுண்டன் ரிசார்ட் (உரிமையாளர் டேவிட்) பொக்காபுரம், சோலூர்

2. இன் தி வைல்டு, நார்தன் எஸ்டேட், மசினகுடி

3. புளு வேலி, பொக்காபுரம், சோலூர்

4. கிளண்டன் பேரடைஸ், உல்லத்தி

5. அலோக்குப்தா ரிசார்ட், வாழைத் தோட்டம், மசினகுடி

6. வெஸ்லி வுட் எஸ்டேட் (பிரதீப் சம்பத்) சிங்காரா, மசினகுடி

7. பெல் மவுண்ட் ரிக்ரைட், பொக்காபுரம், சோலூர்

8. சபாரி லேண்ட், பொக்காபுரம், சோலூர்

9. மவுண்ட் வியூ பார்ம் (வேணி) பொக்காபுரம், சோலூர்

10. வெஸ்டர்ன் பார்ம், செம்மனத்தம், மசினகுடி

11. வைல்டு இன் (சிவமோகன்) பொக்காபுரம், சோலூர்

12. கிங்ஸ் ரேஞ்ச் ரிசார்ட், வாழைத்தோட்டம், மசினகுடி

13. தீனதயாள் ரிசார்ட், சொக்கநல்லி, கடநாடு

14. ஹான் பில் கிளப் (தரணி, ரியாஜுல்லா மற்றும் சிலர்) பொக்காபுரம், சோலூர்

15. மவுண்ட் மிஸ்ட் ரிசார்ட் (தலிமா ஜோசப் நிக்கில்) பொக்காபுரம், சோலூர்

16. கிளன் வியூ, பொக்காபுரம், சோலூர்

17. நிக்காரா நீலகிரீஸ், வாழைத்தோட்டம், மசினகுடி

18. அன்னசோலை, பொக்காபுரம், சோலூர்

19. எக்கோ கேம்ப் (அபிபுல்லா) செம்மனத்தம், மசினகுடி

20. ஜெனிபர் பிரஷீலா (பிரேம் கிரிஸ்டி தாஸ்)

21. நிஜாமூதின், பொக்காபுரம், சோலூர்

22. நார்தன் ஹே எஸ்டேட் (இந்திரா ஐயர், ரெட்டி) சிங்காரா, மசினகுடி

23. தி வைல்டு (ஜுலைக்கா காசிம் சேட்) சவுத்வீக் காட்டேஜ், உதகை

24. வெஸ்ட்ரன், பார்ம் ரிசார்ட் (ரவி) செம்மனத்தம், மசினகுடி

25. எலிபென்ட் எக்கிளேவ் (ரஞ்சித் குருவில்லா) பொக்காபுரம், சோலூர்

26. தாமோதரா (சஞ்சய் பால்) பொக்காபுரம், சோலூர்

27. வைல்டு அட்வன்சர் பார்ம் ஹவுஸ் (சுசீலா) பொக்காபுரம், சோலூர்

பரிசீலனையில் உள்ள 12 சுற்றுலா விடுதிகள் : 

1. ரோலிங் ஸ்டோன், வாழை தோட்டம், மசினகுடி

2. ஜங்கிள் ரிக்ரைட் (ரோகன் மத்தியாஸ்) பொக்காபுரம், சோலூர்

3. மோனார்க் சபாரி பார்க் (இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி) பொக்காபுரம், சோலூர்

4. வைல்டு ஹெவன், வாழைத்தோட்டம், மசினகுடி

5. ஜங்கிள் ஹர்ட், (விக்ரம் மத்தியாஸ்) பொக்காபுரம், சோலூர்

6. பாரஸ்ட் ஹில் கெஸ்ட அவுஸ், பொக்காபுரம், சோலூர்

7. பார்ம் கெஸ்ட் ஹவுஸ், பொக்காபுரம், சோலூர்

8. தி ராக் ரிசார்ட், பொக்காபுரம், சோலூர்

9. காஷா டீப் வுட், பொக்காபுரம், சோலூர்

10. ஜெயின் ரிசார்ட், வாழைத்தோட்டம், மசினகுடி

11. அலோக்குப்தா, வாழைத்தோட்டம், மசினகுடி

12. புளூவேலி, பொக்காபுரம், சோலூர்

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...