கோவை: கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பொள்ளாச்சி வால்பாறை, சின்னகல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதனிடையே. பகல்நேர வெப்ப நிலையானது 28 முதல் 29 டிகிரி செல்சியஸ்யாகவும், இரவுநேர வெப்ப நிலை 21 முதல் 22 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 12 முதல் 14 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்தத் தாழ்வு நிலையல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்து வருகிறது. கேரளாவில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்து வருகிறது," என்றார்.