கேரளத்தில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு: ஓணப் பண்டிகை கொண்டாட்டம் ரத்து

கேரளா: தொடர் கனமழையினால் வரலாறு காணாத அளவிலான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளா: தொடர் கனமழையினால் வரலாறு காணாத அளவிலான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். வயநாடு, இடுக்கி, கண்ணூர், கோழிக்கூடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் இந்த கனமழைக்கு சீர்குலைந்து போயின. 

சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, கனமழை பாதிப்பையடுத்து இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு முதலமைச்சர் பினராயி விஜயன் இதனை அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில் ‘‘கனமழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளைக் கேரளா சந்தித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். வீடு, உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ஓணம் பண்டிகையை அரசு சார்பில் வழக்கம் போல் கொண்டாடுவது சரியாக இருக்காது. 

எனவே, இந்த ஆண்டு அரசு சார்பில் நடக்கும் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடைபெறும்’’ எனக் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...