கோவை: மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரிக்கால் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரிக்கால் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நியாயமற்ற பிடித்தங்களை திரும்பத் தர வேண்டும், தொழிலாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், வேலைப்பளுவைக் குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பிரிக்கால் தொழிலாளர்கள், தங்களின் குடும்பத்தோடு வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.