கோவை: சோமனூரில் செயல்பட்டு வந்த குட்கா குடோனில் இருந்து ஒரு டன் எடையுள்ள குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: சோமனூரில் செயல்பட்டு வந்த குட்கா குடோனில் இருந்து ஒரு டன் எடையுள்ள குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதத்தில் மட்டும், சூலூர் கண்ணம்பாளையம் உட்பட நகரில் முக்கிய இடங்களில் இதுவரை மூன்று குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது நான்காவது குடோனாக சோமனூர் பகுதியில் உள்ள ஒரு குட்கா குடோன் செயல்படுவதை அறிந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு நேற்று (திங்கட்கிழமை) சோதனையி நடத்தி, ஒரு டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "இந்த குடோனின் உரிமையாளர் ஜித்து மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற குடோன் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் கோவையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்." என்றார்.