திருப்பூர்: திருமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் சமூக அமைதியை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 18ஆம் தேதி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சமையலர் பாப்பாள் சமையல் செய்யக்கூடாது என ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த பிரச்சினை நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியதன் விளைவாக பாப்பாள் மீண்டும் அதே பள்ளியில் பணிபுரிய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடரப்பட்டதில் 87 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு பெண் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இரு தரப்பினரிடமும் அமைதியை ஏற்படுத்திடும் வகையில் சார் ஆட்சியர் ஷ்ரவண் குமார் தலைமையில் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சார் ஆட்சியர், திருப்பூர் திருமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த கால சம்பவங்களால் ஏற்பட்ட பிரச்சினையை சுமூகமாக்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இரு தரப்பினரும் அவரவர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இரு தரப்பினரும் சமூக அமைதியினையே விரும்புவதால் விரைவில் சமூக அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், மாணவர்களின் மனநிலையினை சகஜ நிலைக்கு கொண்வர நாளை முதல் உளவியல் ரீதியான பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றும் சார் ஆட்சியர் ஷ்ரவண் குமார் தெரிவித்தார்.