கேரளா: கனமழை காரணமாக பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நிறைபுத்தரிசி பூஜைக்காக அடுத்த இருநாட்கள் (ஆக., 14, 15) பக்தர்கள் யாரும் சபரிமலை வரவேண்டாம் என தேவசம்போர்ட்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சபரிமலை தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சபரிமலையில் நாளை (ஆக.,14) நிறைபுத்தரிசி பூஜைக்காக நடை திறக்கப்படவுள்ளது. கேரளாவில் தற்போது கொட்டி வரும் கனமழையால், பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் பம்பா நதியை கடக்க வசதியாக உள்ள இருபாலங்களும், வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால். பக்தர்கள் பம்பா நதியை கடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே. அடுத்த இருநாட்களும் (ஆக.,14,15) பக்தர்கள் யாரும் சபரிமலைக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். மீறி சபரிமலை நோக்கி வரும் பக்தர்கள் எரிமேலி, பத்தினிம்திட்டா, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.