சரவணம்பட்டி அருகே காணாமல் போன பெண்குழந்தை சடலமாக மீட்பு : போலீசார் பெற்றோரிடம் துருவி துருவி விசாரணை

கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் இன்று காணாமல் போன 3 மாத பெண் குழந்தை வீட்டின் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் இன்று காணாமல் போன 3 மாத பெண் குழந்தை வீட்டின் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரத்தில் உள்ள 3-வது வீதியில் வசித்து வருபவர் கார்த்திக் (32). இவருக்கு கவிஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை உள்ளது. இன்று மதியம் கார்த்திக் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, வீட்டினுள் புகுந்த மர்மநபர் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். மேலும், வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக குழந்தை இருப்பது போன்றே துணியை மூடிவைத்து சென்றுள்ளனர். 

மேலும், வீட்டில் இருந்த பீரோவில் இருந்து ரூ. 500-ஐயும் எடுத்துச் சென்றுள்ளனர். நீண்ட நேரம் குழந்தையிடம் இருந்து எந்தவித சத்தமும் இல்லாததால், சந்தேகம் அடைந்த தந்தை கார்த்திக், குழந்தை தூங்கி கொண்டிருந்த இடத்தில் உள்ள துணியை விலக்கிப் பார்த்துள்ளார். அப்போது, அங்கு குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், சோதனை செய்ததில், வீட்டிற்குள் யாரோ மர்மநபர்கள் வந்தது போன்ற அடையாளங்கள் தென்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில், சரவணம்பட்டி போலீசார் குழந்தை கடத்தல் தொடர்பாக சி.சி.டி.வி., காட்சிகள் மற்றும் சந்தேகப்படும் நபர்கள் என பல நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கார்த்திக்கின் வீட்டில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் துணியால் சுற்றப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் விசாணையை நடத்திய போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாகத் தெரிகிறது. இதனால், இந்தக் கொலை சம்பவத்தில் குழந்தையின் பெற்றோர்களுக்கு தொடர்பிருக்கிறதா...? அல்லது வேறு யாரேனும் குழந்தையைக் கடத்தி கொலை செய்துள்ளனரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...