நீலகிரி: நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கே.ஆர். அர்ஜூணனை மாற்ற வலியுறுத்தி முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் புத்திச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலாளராகவும், மாநிலங்கவை உறுப்பினருமாக கே.ஆர். அர்ஜூணன் இருந்து வருகிறார். இவர் தனக்கு வேண்டிய பட்டவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்கி வருவதாகவும், கூட்டுறவு தேர்தலில் மாற்று கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி இன்று உதகை தேவாங்கர் மண்டபத்தில் அதிருப்தியாளர்களின் கூட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் புத்திச்சந்திரன் மற்றும் முன்னாள் பால்வளத் தலைவர் எல்.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கே.ஆர். அர்ஜூணன் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்களுக்கு பதவி வழங்கியதாகவும், தொடர்ந்து உறுப்பினர்களில் அதிருப்தியை சந்தித்து வருவதால் அவரை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு கமிட்டி அமைத்து இன்றோ அல்லது நாளை தலைமையை சந்திக்க முடிவெடுக்கப்பட்டது.