கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் 3 மாதக் குழந்தையை மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவணம்பட்டியில் உள்ள சிவானந்தபுரத்தில் உள்ள 3-வது வீதியில் வசித்து வரும் கார்த்திக் (32). இவருக்கு கவிஸ்ரீ என்ற 3 மாத குழந்தை உள்ளது. இன்று மதியம் கார்த்திக் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, வீட்டினுள் புகுந்த மர்மநபர் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். மேலும், வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக குழந்தை இருப்பது போன்றே துணியை மூடிவைத்து சென்றுள்ளனர்.
மேலும், வீட்டில் இருந்த பீரோவில் இருந்து ரூ. 500-ஐயும் எடுத்துச் சென்றுள்ளனர். நீண்ட நேரம் குழந்தையிடம் இருந்து எந்தவித சத்தமும் இல்லாததால், சந்தேகம் அடைந்த தந்தை கார்த்திக், குழந்தை தூங்கி கொண்டிருந்த இடத்தில் உள்ள துணியை விலக்கிப் பார்த்துள்ளார். அப்போது, அங்கு குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், சோதனை செய்ததில், வீட்டிற்குள் யாரோ மர்மநபர்கள் வந்தது போன்ற அடையாளங்கள் தென்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில், சரவணம்பட்டி போலீசார் குழந்தை கடத்தல் தொடர்பாக சி.சி.டி.வி., காட்சிகள் மற்றும் சந்தேகப்படும் நபர்கள் என பல நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காணாமல் போன குழந்தையையும் தீவிரமாக தேடி வருகின்றனர். சரவணம்பட்டி பகுதியில் வீட்டிற்குள் இருந்த குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.