திருப்பூர் : திருமளைக்கவுண்டம்பாளையம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சமையலர் பாப்பாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு பிரிவினர் மனு அளித்தனர்.

அவினாசி அருகே உள்ள திருமளைக்கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாப்பாள் என்பவர் சமைக்கக்கூடாது என ஒரு பிரிவினர் பணி செய்யவிடாமல் தடுத்தனர். இப்பிரச்சினை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பிரச்சினைக்குக் காரணமான 87 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ததோடு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, ஆகஸ்ட் 7-ம் தேதி பாப்பாள் சமைத்த உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் சாப்பிட்ட 11 மாணவிகள் மற்றும் 1 மாணவர் உட்பட 12 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சர்ச்சை எழுந்ததையடுத்து அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பாப்பாள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சமையலர் பாப்பாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும்.மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.