நீலகிரி: மாயார் யானை வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்கள் மூடப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மசினக்குடி, பொக்காபுரம் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் மாயார் யானை வழித்தடத்தில் உள்ள 27 ரிசார்ட்களை உடனடியாக மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பேரில் ரிசார்ட் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீல் வைக்கும் பணி தொடங்கியது. (11-ம் தேதி) நேற்று முன்தினம் 24 ரிசார்ட்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, மசினக்குடி அருகேயுள்ள நார்தன் ஹே ரிசார்ட்டுக்கு அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த யானைகள் விரட்டியதால், அதிகாரிகள் அங்கிருந்து திரும்பினர். மீண்டும் நேற்று காலை அப்பகுதிக்குச் சென்று ரிசார்ட்க்களுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவுப் படி 27 ரிசார்ட்டுகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
கடையடைப்பு

ரிசார்ட்டுகளைத் தொடர்ந்து 821 குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி மசினக்குடி, பொக்காபுரம் பகுதிகளில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மசினக்குடி, பொக்காபுரம், மாவன்ஹல்லா பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இதனால், மசினக்குடி பஜார் வெறிச்சோடியது.