வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் சர்வதேச உடல் உறுப்பு தானம் தினம் அனுசரிப்பு

கோவை : சர்வதேச உடல் உறுப்பு தான தினம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.

கோவை : சர்வதேச உடல் உறுப்பு தான தினம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.

அரிமா சங்க 324 பி5 மாவட்டத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் சசிக்குமார் தலைமை வகித்தார். ஜி குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் உடல் உறுப்பு தான துறையின் மேலாளர் வீணா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை சிறப்பு விருந்தினர் வீணா ஆடியோ காட்சி மூலம் மாணவர்களுக்கு ஏற்படுத்தினார். உடல் உறுப்பு தானம் குறித்த மாணாக்கரின் பல்வேறு சந்தேகங்களையும், இந்தியாவில் தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதல் மாநிலமாக திகழ்வதன் காரணங்களைவும் அவர் எடுத்துரைத்தார்.

உறுப்பு தானம் செய்ய விருப்பமுள்ள பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் பெயரைப் பதிவு செய்வது குறித்து ‘Gift an Organ’ இணையதளம் செயல்முறைகளை எட்டாம் வகுப்பு மாணவர் சித்தேஸஷ்வர் விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து, உலக உறுப்பு தானம் சின்னத்தை மாணவி, மாணவியர்கள் பள்ளி மைதானத்தில் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...