கோவை: கோவை உட்பட இரண்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை: கோவை உட்பட இரண்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது:-
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மேலும், கர்நாடக பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், மேற்கு திசை காற்றின் வழு அதிகரிக்கக் கூடிய நிலையில், மலை மாவட்டங்களான கோவை, தேனி மற்றும் நீலகிரியில் அடுத்து வரும் ஓரிரு தினங்களுக்கு, மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.