ஜனவரி 3-ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 : விரைவில் இஸ்ரோ டிவி தொடங்குகிறது

பெங்களூர்: அடுத்தாண்டு ஜனவரி மாதம் 3-ம் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் மக்கள் இஸ்ரோ குறித்த செய்திகளை தெரிந்துகொள்ளும் விதமாக தொடங்கப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூர்: அடுத்தாண்டு ஜனவரி மாதம் 3-ம் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் மக்கள் இஸ்ரோ குறித்த செய்திகளை தெரிந்துகொள்ளும் விதமாக தொடங்கப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.



பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவன் கூறுகையில், "அடுத்த 3 ஆண்டுகளில், 50 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் மட்டும், 22 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்த உள்ளோம்.

சந்திரனின் நிலப்பரப்பு, கனிமவளம் மற்றும் நீர் இருப்பு போன்றவற்றை கண்டுபிடிப்பதற்காக சந்திராயன் 2 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. அந்த செயற்கைக்கோள் வருகிற ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 

இந்த இலக்கு தவறும் பட்சத்தில் மார்ச் மாதம் மீண்டும் செயற்கைக்கோள் செலுத்தப்படும். மேலும் இஸ்ரோ தொடர்பான செய்திகளை அனைத்து மக்களும் அறியும் வண்ணம் விரைவில் இஸ்ரோ டிவி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் இஸ்ரோவின் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...