திருப்பூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு முகநூல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு முகநூல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அன்று அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதற்காக பல்வேறு நீதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கருணாநிதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இந்த நிலையில், திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராசுக்குட்டி எனும் கனகசுந்தரம் என்பவர் முகநூலில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா இருவரையும் விமர்சித்தும் கெட்ட வார்த்தைகளிலும் பதிவு செய்திருந்தார்.

கடந்த 8-ம் தேதி இரவு விடுத்த முகநூல் பதிவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் கொலை மிரட்டலும் விடுத்திருந்தார். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் கணேசன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் கனகசுந்தரத்தை கடந்த 11-ம் தேதி கைது செய்தனர்.