கோவை : கடந்த 30 ஆண்டுகளாக கிரையத் தொகையைச் செலுத்தி வந்த நிலையிலும், மாநகராட்சி, நகரமைப்பு அலுவலர்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு மிரட்டுவதாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஜீவா நகர் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை: கடந்த 30 ஆண்டுகளாக கிரையத் தொகையைச் செலுத்தி வந்த நிலையிலும், மாநகராட்சி, நகரமைப்பு அலுவலர்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு மிரட்டுவதாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஜீவா நகர் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எருக்கம்பெனி அருகே அமைந்துள்ளது ஜீவா நகர். இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 1988-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம், ஜீவா நகர் பகுதியை தத்தெடுத்து ஓட்டு வீடுகள் கட்டுவதற்கு கடன் வழங்கியுள்ளது. இந்த நிலத்திற்கான கிரையத்தொகை மற்றும் குத்தகை தவணைத் தொகைகளை கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே. ஜீவா நகரில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அக்குடியிருப்புகளை சுற்றியுள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் குடிசை மாற்று வாரியம், மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சியை எதிர் மனுதாரராக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், ஜீவா நகரில் வசிக்கும் 204 பேருக்கும் இருக்கின்ற இடத்தை கிரையம் செய்து கொடுக்க சட்டரீதியான நடவடிக்கையை குடிசை மாற்று வாரியம் எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், தங்களை காலி செய்யக்கோரி மாநகராட்சி மற்றும் நகரமைப்பு துறையினர் வாய்மொழியாக மிரட்டுவதாக அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.