சென்னை: கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன்பக்கம் தான் இருப்பதாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்
சென்னை: கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன்பக்கம் தான் இருப்பதாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இன்று காலையில் வருகைதந்த மு.க. அழகிரி, தன் குடும்பத்தினருடன் அங்கே அஞ்சலி செலுத்தினார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க, அழகிரி,
"என் ஆதங்கத்தை கலைஞரிடம் சொல்வதற்காகவே இங்கு வந்தேன்.
நான் சொல்வதை கலைஞர் தொலைக்காட்சியில் வெளியிட மாட்டார்கள். எங்க அப்பாகிட்ட என்னுடைய ஆதங்கத்தை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
அது என்ன ஆதங்கம் என்பது இப்போது தெரியாது.
என் தலைவர் கலைஞரின் விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லாம், என் பக்கம்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விசுவாசிகளும் என்னுடைய பக்கம் இருக்கிறார்கள். காலம் இதற்குப் பதில் சொல்லும் என்பதோடு முடித்துக்கொள்கிறேன்" என்றார்.