வால்பாறை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வால்பாறை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், அங்குள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலம் சென்றனர்.

பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், வால்பாறையின் முக்கிய வீதி வழியாக தபால் நிலையம் சென்று அங்கிருந்து அண்ணாதிடலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் முன்னாள் மாணவர்களும், தி.மு.க., கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் என 250-க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.