கோவை மத்திய சிறையில் குடும்பத்துடன் உணவு உண்டு மகிழ்ந்த நன்னடத்தை கைதிகள்

கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள நன்னடத்தை சிறைவாசிகள் அவர்களின் குடும்பத்துடன் உண்டு மகிழ சிறைத்துறை சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.



கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள நன்னடத்தை சிறைவாசிகள் அவர்களின் குடும்பத்துடன் உண்டு மகிழ சிறைத்துறை சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

கூடுதல் காவல் துறை இயக்குனர், சிறைத்துறை தலைவர் மற்றும் சிறைத்துறை துணைத் தலைவர் (கோவை சரகம்) ஆகியோரின் உத்தரவின்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலையில் கோவை மத்திய சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் தண்டனை சிறைவாசிகளுக்கான சிறப்பு நேர்காணல் நேற்று நடைபெற்றது.



இவர்களில் நன்னடத்தையுடன் செயல்படும் 21 கைதிகளை சிறை நிர்வாகத்தினர் தேர்ந்தெடுத்து அவர்களை நேற்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உணவு உண்டு பேசி மகிழ சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்டு சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களிடம் அன்பைச் செலுத்தினர்.

இதில், சிறையில் உள்ள உணவகத்தில் இருந்து உணவுப் பொருட்கள் போன்றவற்றை தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறை வாசிக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் உறவாடினர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த காவல்துறைக்கும், சிறைத்துறைக்கும் நன்னடத்தை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...