நீலகிரி: நீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகியப் பகுதி கள் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்கள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், யானை வழித்தடங்களை வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்கள் மீது பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர். யானைகள் வழித் தடத்தில் கட்டப்பட்டுள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்களின் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை, அடுத்த 24 மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்வார். அந்த ரிசார்ட்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டிருந்தால், ஆட்சியர் முடிவு எடுக்கலாம். சட்டத்துக்குப் புறம்பாக, முன் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்தால், அடுத்த 48 மணி நேரத்தில் தங்கும் விடுதிகளையும் மூடி சீல் வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதன் பேரில் மாயார் யானைகள் வழித்தடத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 48 மணி நேர அவகாசம் முடிந்த நிலையில் சீல் வைத்தல் பணி தொடங்கியது.
உதகை கோட்டாச்சியர் டாக்டர் சுரேஷ் தலைமையில் சீல் வைத்தல் பணி நடந்து வருகிறது. டி.எஸ்.பி., சங்கு தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் பணி நடந்து வருகிறது.