கோவை: வெள்ளலூர் குளத்தில் மியாவாக்கி முறையில் பசுமை பரப்பை உருவாக்கும் களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளலூர் குளத்தில் இரண்டாவது கட்டமாக உருவாக்கப்பட்டுள்ள அடர் வனத்தில் களை எடுத்தல், பராமரித்தல் மற்றும் உயிர் உரமளிக்கும் பணி இன்று நடைபெற்றது. மேலும் குளக்கரையினை பலப்படுத்திடவும், நிலத்தடி நீர் மட்டம் உயர வழி செய்திடும் நோக்கத்தோடு பனை விதைகளும் விதைக்கப்பட்டன.

இன்றைய களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, என்.ஐ.கே., டியுசன் சென்டர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் என 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். காலை 7 மணி முதல் 9.30 வரை நடைபெற்றது.