கோவை: 'சோ அவேர்' (So AWARE) என்கிற தன்னார்வ அமைப்பு ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று நடத்திய நிகழ்ச்சியில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு கிட்ஸ் மார்க்கெட்டை நடத்தினர்.
கோவை: 'சோ அவேர்' (So AWARE) என்கிற தன்னார்வ அமைப்பு ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று நடத்திய நிகழ்ச்சியில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு கிட்ஸ் மார்க்கெட்டை நடத்தினர்.

விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சோ அவேர் அமைப்பினர் கிட்ஸ் மார்க்கெட்டை அமைத்தனர்.
இதில், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளும் இதில் கலந்து கொண்டனர்.

இது குறித்து, சோ அவேர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "விவசாயத்தைக் காட்டிலும் தொழில் நுட்பங்களே இன்றைய காலகட்ட சிறார்களை சுற்றி இருக்கின்றன. காய்கறிகள் கூட ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்யப்படுகிறது. அப்போது தான் குழந்தைகள் அவற்றை பார்க்கின்றனர். ஆதலால், வேளாண்மை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

"இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு விவசாயம், அறுவடை மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார் கோவை வாசி ஒருவர்.
கிட்ஸ் மார்க்கெட்டில், விவசாயிகளுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியவாறு விவசாயிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட நிதி பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கு செலவிடப்படும் என்று கூறப்பட்டது.