திருப்பூர்: தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகளின் அனுமதி இல்லாமல் டவர் லைன் அமைக்கக் கூடாது என்று திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டு இயக்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டமானது திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கும் முன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராஜாமணி கூறுகையில், "அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையை கொண்டு தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க விவசாயிகளை அச்சுறுத்தும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும் மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) பத்தாம் தேதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.
அதோடு தமிழக மின்சாரத் துறை அமைச்சரிடம் விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் டவர் லைன் அமைப்பதற்கு கேபிள் மூலமாக அமைக்கக் கூறினோம். ஆனால், கேபிள் மூலம் சாத்தியம் இல்லை என கூறிவிட்டதோடு முதலமைச்சரிடம் பேசி முடிவு செல்வதாக கூறிய மின்சார வாரிய அமைச்சர் ஒரு மாத காலமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே டவர் லைன் விவகாரத்தில் கேபிள் மூலம் அமைத்தால் விவசாயிகள் ஆதரிப்போம். அதே போல் விவசாயிகளின் அனுமதியில்லாமல் டவர் லைன் அமைக்கப்பட்டால், தமிழகத்தில் உள்ள விவசாயிகளைத் திரட்டி தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். இந்த தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது." என்றார்.