சென்னை: ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் சென்னை உயர் மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பொறுப்பு காலியாக இருந்தது.
பின்னர், மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த விஜய் கம்லேஷ் தஹில் ரமணி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தஹில் ரமணி பதவியேற்பு விழா இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தஹில் ரமணிக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.