கோவை: காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க., பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணபதி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர் கணபதி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக இருந்து வருகின்றார். காந்திபுரம் 7-வது வீதியில் பிக் பிரேண்ட் என்ற பெயரில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் முகத்தை மறைத்தபடி வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் கடை வாசலில் கடையின் ஷெட்டர்களின் இடுக்குகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

இந்த தீ வேகமாக கடையின் ஷட்டர் முழுவதும் பரவியது. பின்னர் இங்கு அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அனைத்து ரத்தனகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் புவேனேஸ்வரனுக்கு தொழில் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அரசியல் ரீதியாகவோ அல்லது உட்கட்சி பிரச்சனை காரணமாகவோ புவனேஸ்வரன் கடைக்கு தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.
ஷட்டர் மட்டும் எரிந்த நிலையில் உள்ளே இருந்த சுமார் 8 லட்சம் மதிப்புள்ள துணிகள் தூசி படிந்து பயன்படுத்த முடியாத நிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது.