கோவை: மேட்டுப்பாளையத்தில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், 150 கல்லூரி மாணவர்கள் ஒரே இடத்தில் ரத்த தானம் செய்தனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், 150 கல்லூரி மாணவர்கள் ஒரே இடத்தில் ரத்த தானம் செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் உடல் தகுதி உள்ள ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இம்முகாம் நடைபெற்றது. இதில், நான்கு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். காரமடையில் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பயனியர் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எஸ்.ஜ., பள்ளி மாணவர்கள் என 150 பேர் பங்கேற்று 100 யூனிட் ரத்தம் கொடையளித்தனர்.

முன்னதாக, இந்த முகாமினை ஆர்.வி.,.ஆர் கல்லூரி நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இம்முகாமில், விபத்து ஏற்படும் நேரத்தில் ரத்தம் தேவைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த முகாமில் கொடையளிக்கப்பட்ட 100 யூனிட் ரத்தம், கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.