கோவை: புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்முனைவோர்களையும் வளர்ப்பதற்காக ரூ. 10 கோடி முதலீட்டில் பிரத்யேக மையம் ரத்தினம் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது.

நிதி ஆயோக்கின் மூலம் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும், வளர்ச்சியையும், தொழில் முனைதலையும் ஊக்குவித்து வருகிறது. இதன் முக்கிய திட்டமான 'அடல் இன்னோவேஷன் மிஷன்' எனும் திட்டத்தின் கீழ் இளம் தொழில்முனைவோர்களை ஆதரித்து வளர்ப்பதற்காக, கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் ரூ. 10 கோடி முதலீட்டில் புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்முனைவோர்களையும் வளர்ப்பதற்காக பிரத்யேக மையம் ஒன்று ரத்தினம் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது. இந்த மையத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 150 தொழில்நுட்ப மற்றும் சமூகம் சார்ந்த தொழில்முனைவோர்கள் சமூக மேம்பாட்டிற்கான தங்களது எண்ணங்களையும், திட்டங்களையும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தி நிலையான தொழில் முன்மாதிரிகளாக மாற்றுவதற்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள், ஆலோசனைகள், முதலீடுகள் என அனைத்து வசதிகளும் உலகத் தரத்தில் இம்மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது.