தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரிட்டன் எம்.பி., பவுல் ஸ்கூலி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த டாக்டர் கருணாநிதிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் அனைத்து தமிழ் அமைப்புகளின் தலைவர் என்ற முறையில், தமிழக மக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகள் எனக்கு தெரியும். இலங்கை உள்நாட்டுப் போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக கருணாநிதி அயராது, அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களின் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் அவரது பணிகள் மற்றும் சாதனைகள் பல ஆண்டுகளானாலும் மறையாது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.