வடகோவை மாநகராட்சி பள்ளியில் நாளை நடக்கிறது 'நம்ம ஊரு சந்தை'

கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.


கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இயல்வாகை என்ற தன்னார்வ அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வருகின்றது. மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் இந்த சந்தை நடைபெறுகிறது. இதில், இயற்கை வழி விவசாய விளைபொருட்கள், தேன், சிறு தானிய தின்பண்டங்கள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், மதிப்புக் கூட்டிய உணவுப் பொருட்கள், மர விளையாட்டு சாமான்கள் என இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.



நாளை (ஆக.,12) நடைபெறவிருக்கும் நம்ம ஊரு சந்தையில் "மழை நீர் சேகரிப்பு" என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பவானியைச் சேர்ந்த இயற்கை சிவா விளக்கமளிக்கிறார். மேலும், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் எழுதிய "உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு" புத்தக அறிமுக விழாவும் நடக்கிறது. 

இந்த நிகழ்ச்சியில், மருத்துவ அரங்கு, சிறார் அரங்கு, விவசாய அரங்கம் போன்ற அரங்கங்களின் கீழ் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...