கோவையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் கத்தியால் குத்தி கொலை

கோவை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை வழிமறித்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை வழிமறித்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டேல் வீதிகாட்டூரைச் சேர்ந்த காளியின் மகன் சரவணன் (40) என்கிற சரவணகாந்த். இவர் மேல் ரத்தினபுரி, காட்டூர், பீளமேடு, புலியகுளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற 18 வழக்குகள் உள்ளன. கடைசியாக ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி கடந்த 8 மாதத்திற்கு முன்பு மத்திய சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 7.00 மணியளவில் சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் (TN 38 AF 8197) சென்று கொண்டிருந்தார். அப்போது, சோமசுந்தரா மில் அருகே உள்ள ரயில்வே பாலத்திற்கு முன் இவரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளனர். 

அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற சரவணனின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காட்டூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சரவணன் கடந்த 2004-ம் ஆண்டு பழையூர் பாப்பநாயக்கன்பாளையத்தில் இரண்டு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, கத்தியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், பீளமேடு பகுதியில் காரை ஏற்றி ஒருவரை கொலை செய்தது உட்பட 18 வழக்குகள் அவர் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...