கனமழை மற்றும் வெள்ளத்தால் கோவை குற்றாலம் இன்றும் மூடல்

கோவை: தொடர் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: தொடர் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்குப் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதன் காரணமாக கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பெரும்பாலும் கோவை குற்றாலம் மூடியே கிடந்தது.

பின்னர், மழையின் அளவு குறைந்ததால் 48 நாட்களுக்குப் பிறகு கடந்த 4-ம் தேதி கோவை குற்றாலம் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. 

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப் பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கோவை குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 9-ம் தேதி முதல் இரண்டு நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனிடையே, மழையின் அளவு தொடர்ந்து நீடிப்பதால், கோவை குற்றாலத்தில் 3-வது நாளாக இன்று மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல, பில்லூர் அணை நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பர்லிக்காடு மற்றும் பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...