கோவை: கோவை வ.உ.சி., மைதானம் மற்றும் பூங்காவில் லயன்ஸ் கிளப்புடன் கோவை மாநகர காவல்துறை இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
கோவை: கோவை வ.உ.சி., மைதானம் மற்றும் பூங்காவில் லயன்ஸ் கிளப்புடன் கோவை மாநகர காவல்துறை இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில், காவல்துறையில் உள்ள போக்குவரத்து, குற்றம், சட்டம் ஒழுங்கு என அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த காவலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த தூய்மை பணியில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அங்குள்ள குப்பைகளை அகற்றினர்.

இந்த நிகழ்ச்சியின் போது மாநகர காவல் ஆணையர் பெரியய்யா கூறியதாவது :- இந்த தூய்மைப் பணியானது சிறப்பான பணியாகும். இதற்கு பொது மக்களும், தன்னார்வலர்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்தனர்.

இத்தகைய தூய்மை பணிகள் வருங்காலங்களில் பொது இடங்களான கலைக் கல்லூரி, அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் சிறப்பாக செய்யப்படும். அதேபோல, வ.உ.சி., மைதான ஓரத்தில் வரும் வாரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணியும் நடைபெறும். பொதுமக்கள் தங்களுடைய இடத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்