அரசு மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளுக்கும் ஒன்றிணைந்து உதவுவோம் - உம்மன் சாண்டி

கோவை: கேரள மாநில மக்கள் மழையால் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் அரசியல் வித்தியாசங்களைப் பேச விரும்பவில்லை எனவும் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளுக்கும் எதிர்கட்சிகள் ஒன்றினைந்து உதவுவோம் என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.


கோவை: கேரள மாநில மக்கள் மழையால் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் அரசியல் வித்தியாசங்களைப் பேச விரும்பவில்லை எனவும் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளுக்கும் எதிர்கட்சிகள் ஒன்றினைந்து உதவுவோம் என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகியை நலம் விசாரிப்பதற்காக கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி வருகை தந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவரான கருணாநிதி, கேரள மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார் எனவும் அவரது மறைவு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். 

கேரள மக்கள் மழையால் சொல்லில் அடங்கா துயரத்திலும், பயத்திலும் ஆழ்ந்துள்ளதாகக் கூறிய அவர், இந்த சூழலில் அரசியல் வித்தியாசங்கள் குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்தார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.



மேலும், மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறிய உம்மன் சாண்டி, மத்திய அரசின் உதவியில்லாமல் மீட்பு பணிகளை செய்துவிட முடியாது என்றும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் மீட்பு பணிகளை வரவேற்பதாக தெரிவித்தார். 



மீட்பு பணிகளுக்கு பிறகு புனரமைப்பிற்காக தேவைப்படும் நிதி குறித்து மாநில அரசு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கும் எனவும் அதனை வழங்க அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்துவோம் எனவும் அவர் கூறினார். மேலும், மழை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு கேரள அரசிற்கு 5 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...